உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது 2 ஆண்டாக கிராமவாசிகள் தவிப்பு

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது 2 ஆண்டாக கிராமவாசிகள் தவிப்பு

பொன்னேரி, மீஞ்சூர் ஒன்றியம் நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுார் அண்ணாநகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், குடிநீருக்காக தனியார் நிறுவன பங்களிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.அதிலிருந்து கிடைக்கும் குடிநீரை கிராமவாசிகள் பயன்படுத்தி வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த இயந்திரங்கள், பில்டர்கள் பழுதாகின. ஆனால், தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இதனால், குடிநீருக்காக கிராமவாசிகள் தவித்து வருகின்றனர்.இது குறித்து கிராமவாசிகள் கூறியதாவது:சுத்திகரிப்பு நிலையம் முடங்கியதால், 1 கி.மீ., தொலைவில் உள்ள நாலுார் கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். டிராக்டர்களில் வினியோகிக்கப்படும் குடிநீரை வாங்கி பருகும் நிலையும் உள்ளது. குடிதண்ணீர் பிரச்னை குறித்து பலமுறை ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, பழுதடைந்த சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பித்து, சுகாதாரமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ