சுடுகாட்டில் கழிவுகள் குவிப்பு அதிருப்தியில் கிராம மக்கள்
கும்மிடிப்பூண்டி:சோழவரம் ஒன்றியம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிறுவாபுரி கோவிலில் இருந்து 1 கி.மீ., தொலைவில், அகரம் நோக்கி செல்லும் சாலையோரம், சின்னம்பேடு கிராம சுடுகாடு அமைந்துள்ளது.இந்த சுடுகாடு வளாகம் முழுதும், ஊராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மலை போல் கழிவுகள் குவிந்திருப்பதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. இறுதி சடங்கிற்காக வரும் மக்கள், சுடுகாட்டின் மோசமான சூழலை சகித்துக் கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.சோழவரம் ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, சின்னம்பேடு சுடுகாட்டில் குவிக்கப்பட்டு வரும் கழிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.மேலும், சுடுகாட்டு வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.