உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கள்ளச்சாராய வழக்கில் திருந்தியோருக்கு தொழிற்பயிற்சி

கள்ளச்சாராய வழக்கில் திருந்தியோருக்கு தொழிற்பயிற்சி

திருவள்ளூர்:கள்ளச்சாராய வழக்கில் மனம் திருந்தியோருக்கு, சிறப்பு தொழிற்பயிற்சி வகுப்பு நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்று, விடுதலை அடைந்த 18 பேருக்கு, தொழிற்பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார். இவர்களுக்கு, பெட்டிக்கடை நிர்வகித்தல், வேளாண் உற்பத்தி பொருட்களின் மதிப்பு கூட்டல், சந்தை படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் அணுகுமுறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !