உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாக்காளர் தின போட்டி மாணவர்களுக்கு பரிசு

வாக்காளர் தின போட்டி மாணவர்களுக்கு பரிசு

திருவள்ளூர்:தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -- மாணவியருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பின், ரங்கோலி வாயிலாக தேர்தல் விழிப்புணர்வு எற்படுத்தியதற்காக, மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ - மாணவியருக்கும் கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்ய பிரசாத், அலுவலக மேலாளர்கள் சங்கிலி ரதி, செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை