உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுவாபுரி முருகன் கோவிலில் 3 மணி காத்திருந்து தரிசனம்

சிறுவாபுரி முருகன் கோவிலில் 3 மணி காத்திருந்து தரிசனம்

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடில், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிக்க வருவர். குறிப்பாக, செவ்வாய்க்கிழமைகளில் கட்டுக்கு அடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சிறுவாபுரி கோவில் நிரம்பி வழியும்.சில செவ்வாய்க்கிழமைகளில் தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. ஆனால், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.புதுரோடு சந்திப்பு மற்றும் அகரம் சந்திப்பில், ஆட்டோ, கார், வேன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பேட்டரி வாகனம் மற்றும் சிறப்பு பேருந்துகளில் கோவில் செல்லும் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.கவரைப்பேட்டை, ஆரணி போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். ஆரணி போலீசாருடன் இணைந்து, பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நீண்ட வரிசையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்ததால், சுவாமி தரிசனம் செய்ய மூன்று மணி நேரம் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை