உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடம்பத்துாரில் வீணாகும் மண்புழு உரக்கூடம்

கடம்பத்துாரில் வீணாகும் மண்புழு உரக்கூடம்

கடம்பததுார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, 43 ஊராட்சிகளில் குப்பை கழிவுகளை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கின்றனர். இதில், மக்கும் குப்பையிலிருந்து மண்புழு உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு, 43 ஊராட்சிகளில் 2017 - 18ல் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், மண்புழு உரக் கொட்டகை மற்றும் மண்புழு வளர்ப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதில், கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையான காய்கறி, பழம், இலை போன்றவை கொட்டப்படுகின்றன. பின், மண்புழுக்களை விட்டு, தொடர்ந்து, 75 நாட்கள் மாட்டு சாணம் தெளித்து பராமரிக்க வேண்டும். பின், தொட்டிககளில் கொட்டப்பட்ட கழிவுகள் மண்புழு உரமாக, விற்பனைக்கு தயாராகி விடும். இந்த மண்புழு உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், நல்ல மகசூல் கிடைக்கும் என்ற திட்டத்துடன் ஊராட்சி பகுதிகளில் மண்புழு தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு இந்த மண்புழு உரம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் சேதமடைந்துள்ளது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் மண்புழு உரம் தயாரிக்கும் கூடங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ