உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் நிலையத்தில் வீணாகும் குடிநீர்

ரயில் நிலையத்தில் வீணாகும் குடிநீர்

திருவாலங்காடு: திருவாலங்காடு ரயில் நிலையத்தில் குடிநீர் டேங்க் நிரம்பி வழிந்து, தண்ணீர் வீணாகி வருகிறது. சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும், 40,000க்கும் மேற்பட்ட பயணியர், சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் மூலம் சென்று வருகின்றனர். பயணியரின் தாகத்தை தீர்க்க, ரயில்வே துறையால் நடைமேடைகளில் குழாய்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக, ஒன்றாவது நடைமேடையில் குடிநீர் டேங்க் உள்ளது. இதற்கு, ஆழ்த்துளை கிணறு மூலம் தினமும் தண்ணீர் ஏற்றப்படுகிறது. கடந்த சில மாதங்களாக டேங்க் நிறைந்தாலும், மின்மோட்டார் இயங்கி கொண்டே இருக்கும். இதனால், டேங்க் நிரம்பி தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து, ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. எனவே, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி