/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மெய்யூர் மக்கள் கலெக்டரிடம் மனு
நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மெய்யூர் மக்கள் கலெக்டரிடம் மனு
திருவள்ளூர்:நீர்வரத்து காய்வாய் ஆக்கிரமிப்பை மீட்க கோரி, மெய்யூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.மெய்யூர் கிராமவாசிகள் திருவள்ளூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட மெய்யூர் கிராமம், புதிய காலனி பகுதியில் வண்டிப்பாதை மற்றும் நீர்வரத்து கால்வாய் அருகே, தனிநபர் ஒருவர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில், பொக்லைன் இயந்திரம் வாயிலாக வண்டிப்பாதை மற்றும் நீர்வரத்து கால்வாய் பகுதியில் இருந்த பனைமரம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்பையை அகற்றி, நீர்வரத்து கால்வாய் நிலத்தை மீட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.