கிருஷ்ணாபுரம் அணையில் தண்ணீர் திறப்பு
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர்வரத்து உள்ளது.கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து, நேற்று, இரவு 9:00 மணிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.இன்று அதிகாலை, பள்ளிப்பட்டு அருகே தமிழக எல்லைக்குள் நுழைந்தது. கொசஸ்தல ஆறு, பெருமாநல்லுார், புண்ணியம், நெடியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடையும்.கொசஸ்தலைக்கு கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறித்து பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சிவகுமார் உத்தரவின்படி, வருவாய் துறையினர், கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தனர்.ஆற்றில் அத்துமீறி யாரும் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.