உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் விளையாட்டு திடலுக்கு புதிய களம் என்னங்க சார் உங்க திட்டம்?

ஏரியில் விளையாட்டு திடலுக்கு புதிய களம் என்னங்க சார் உங்க திட்டம்?

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கிருஷ்ணராஜகுப்பம், கிருஷ்ணமராஜகுப்பம் காலனி, பாலகிருஷ்ணாபுரம், கன்னிகாம்பாபுரம், கோரகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.கிருஷ்ணமராஜகுப்பம் ஏரியில் ஊரக விளையாட்டு திடல் அமைந்துள்ளது. இந்த திடலுக்கு சோலார் மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால், இந்த விளையாட்டு திடலையும் தாண்டி, ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. தண்ணீர் நிரம்பிய ஏரியின் நடுவே சோலார் மின்விளக்கு வீணாக எரிந்து வருகிறது.தற்போது, ஏரியில் தண்ணீர் வற்றியுள்ள நிலையில், விளையாட்டு திடலுக்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோடை பருவத்தில் மட்டுமே கண்ணுக்கு புலப்படும் இந்த திடலுக்கு அமைக்கப்படும் புதிய களத்தால், இளைஞர்கள் பயனடைவார்களா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.கிருஷ்ணமராஜகுப்பம் ஏரியில் பயனின்றி கிடக்கும் விளையாட்டு திடலுக்கு, மீண்டும் மீண்டும் செலவு செய்வதை காட்டிலும், பயனுள்ள விதமாக, விளையாட்டு திடலை ஆண்டு முழுதும் இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில், ஊராட்சிக்கு உட்பட்ட மாற்று இடத்தில் கட்டமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

நிதியை பயன்படுத்த வழி வேண்டுமா?

அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்ள், வி.ஏ.ஓ., அலுவலகங்கள் என, பல்வேறு அரசு வளாகங்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறை வசதி இல்லை. இவற்றை கணக்கிட்டு, அரசு நிதியை தேவையான திட்டங்களுக்கு செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்கு தனியே சுற்றுச்சுவர் எழுப்பி, விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் பயன்படுத்த வழிவகை செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி