மேலும் செய்திகள்
சாலையோர தடுப்புகள் சேதம் சீரமைக்கு பணி எப்போது?
10-May-2025
மீஞ்சூர்:மீஞ்சூர் - மணலி மாநில நெடுஞ்சாலையில் வாகன விபத்துகளை தவிர்க்க, மைய தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.கடந்த 2023ல், 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, இந்த சாலையின் அருகில் உள்ள கொண்டக்கரை, வெள்ளிவாயல்சாவடி, சுப்பாரெட்டிப்பாளையம் ஆகிய கிராமங்களில் மழைநீர் சூழ்ந்தது. சாலைகளிலும் மழைநீர் தேங்கி, வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்தது. சாலையில் இருந்த மைய தடுப்புகளால், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டது.குடியிருப்புகளை மழைநீர் சூழ்வது அதிகரித்ததை தொடர்ந்து, பாதிப்புகளை தவிர்க்க, மேற்கண்ட சாலையில் கொண்டக்கரை, கவுண்டர்பாளையம், வெள்ளிவாயல்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த மைய தடுப்புகள், பொக்லைன் உதவியுடன் உடைத்து, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடிந்த பின், உடைக்கப்பட்ட மைய தடுப்புகள் மீண்டும் அமைக்கப்படாமல் உள்ளது. உடைந்த சிமென்ட் கட்டுமானங்களும் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர்.மேலும், உடைந்து கிடக்கும் மைய தடுப்புகள் வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் புகுந்து, சாலையை கடக்கின்றனர். இதனால், விபத்து அபாயமும் உருவாகி வருகிறது.எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க, மீஞ்சூர் - மணலி மாநில நெடுஞ்சாலையில் உடைக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மைய தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10-May-2025