சாலை விரிவாக்கம் எப்போது? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் கிராமத்தில் இருந்து சுதா நகர் பிரிவு வரையிலான நெடுஞ்சாலை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஒரு வழிச்சாலையாக இருந்தது. இந்த வழியாக வேலுாருக்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.இந்நிலையில், இருவழி சாலையாக விரிவாக்கம் செய்த பின், சாலையோரம் உள்ள மரங்களின் அருகே வரை தார் போடப்பட்டது. இதனால், நான்கு சக்கர வாகனங்கள் எளிதாக பயணிக்க முடிகிறது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் போதிய இடவசதி இன்றி தவித்து வருகின்றனர்.மேலும், அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. பேருந்துக்காக காத்திருப்பவர்களும் சாலையை ஒட்டியே நிற்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, பயணியர் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு கருதி, சாலையோர பகுதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பயணிக்க விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.