உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதிய டேங்க் கட்டியாச்சு பழையதை எப்போ இடிப்பீங்க!

புதிய டேங்க் கட்டியாச்சு பழையதை எப்போ இடிப்பீங்க!

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது அருந்ததியர் காலனி. இந்த கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதிவாசிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக அதே பகுதியில், 2,000ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.ஆழ்துளை போர் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, பின் குழாய் வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.இரண்டு ஆண்டுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் அதனருகே புதிதாக கட்டப்பட்டு, ஓராண்டுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் பழுதடைந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படாமல் உள்ளது.தற்போது, சிமென்ட் காரை உதிர்ந்து வருவதால் குழந்தைகள் விளையாட்டு தனமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே செல்லும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.இந்நிலையில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டியாச்சு, பழையதை எப்போது அகற்றுவீங்க என பகுதிவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை