உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தார்ப்பாய், நம்பர் பிளேட் எங்கே? மண் லாரிகள் தொடர் அட்டூழியம்

தார்ப்பாய், நம்பர் பிளேட் எங்கே? மண் லாரிகள் தொடர் அட்டூழியம்

கடம்பத்துார்:கடம்பத்துார் பகுதியில் தார்ப்பாய் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் பகுதியில் உள்ள ஏரியில், அரசின் அனுமதியோடு சவுடு மண் அள்ளப்படுகிறது. இந்த சவுடு மண் லாரிகள் மூலம் திருப்பாச்சூர், திருவள்ளூர் மற்றும் கடம்பத்துார், மப்பேடு வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.இவ்வாறு கொண்டு செல்லப்படும் சவுடு மண் லாரிகள், தார்ப்பாய் மூடாமல் செல்வதால், அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு சவுடு மண் கொண்டு செல்லும் லாரிகள், பெரும்பாலும் நம்பர் பிளேட் இல்லாமல் சென்று வருகின்றன. இதை, காவல் துறையினரும் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ப்பாய் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை