உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எங்கே செல்லம் இந்த பாதை

எங்கே செல்லம் இந்த பாதை

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது சின்னம்மாபேட்டை.இந்த கிராமத்தின் வழியாக காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.வாகன ஓட்டிகள் தங்கள் செல்லும் ஊர் மற்றும் எத்தனை கி.மீ., தூரம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மைல் கல் மற்றும் வழிப்பலகை வைக்கப்பட்டுள்ளது.சின்னம்மாபேட்டையில், களக்காட்டூர் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறை வாயிலாக வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள வைக்கப்பட்ட மைல் கல் வணிகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதை எங்கே செல்கிறது என தெரியாமல் அவதி அடைகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி மைல் கல்லை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை