மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (05.12.2025) திருவள்ளூர்
20 minutes ago
வலிப்பு நோயால் வாலிபர் உயிரிழப்பு?
23 hour(s) ago
சைபர் வழக்குகளில் ரூ.2.04 கோடி மீட்பு
23 hour(s) ago
ஆர்.கே.பேட்டை: மலையடிவாரத்தில் உள்ள ஏரியை ஒட்டி மழைநீர் சேகரிக்க குட்டைகளை வெட்டுவது, 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் உழைப்பை வீணடிப்பதாகவே உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் ஏரி, குளம், குட்டை, வரத்து கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் துார்வாரி பராமரிக்கப்பட்டு வருகின்றன. மலைகளை ஒட்டிய பகுதியில் மலையில் இருந்து பாயும் மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக, மழைநீர் சேகரிப்பு குட்டைகள் வெட்டப்படுகின்றன. இந்நிலையில், வீரமங்கலம் காப்புக்காட்டில் இருந்து தாமனேரி ஏரிக்கு இடையே உள்ள, 50 அடி இடைவெளியில் மழைநீர் சேகரிப்பு குட்டைகள், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வெட்டப்பட்டுள்ளன. இந்த காப்புக்காட்டில் இருந்து வெளியேறும் மழைநீர், மிக எளிதாக தாமனேரி ஏரியை அடைந்து விடும். இதற்காக பயன்படுத்தப்பட்ட மனித சக்தியை வேறு பயனுள்ள பகுதியில் செயல்படுத்தி இருக்கலாம் என, தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
20 minutes ago
23 hour(s) ago
23 hour(s) ago