உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிகிச்சையில் இருந்த கணவர் பலி கொலை வழக்கில் மனைவி கைது

சிகிச்சையில் இருந்த கணவர் பலி கொலை வழக்கில் மனைவி கைது

புழல்:சிகிச்சையில் இருந்த கணவர் பலியான நிலையில், அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி மீது பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு கைது செய்யப்பட்டார். புழல், லட்சுமிபுரம், காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் காதர் பாஷா, 42; கட்டட தொழிலாளி. இவர், நெய்வேலி, வடலுாரைச்சேர்ந்த, கணவரை இழந்த நிலவர் நிஷா, 48, என்பவரை, மூன்றாவதாக திருமணம் செய்தார். காதர் பாஷாவின் மது பழக்கத்தால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. மேலும், பல பெண்களுடன் காதர் பாஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, நிலவர் நிஷா கணவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். வழக்கம்போல, கடந்த 10ம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நிலவர் நிஷா, எண்ணெயை கொதிக்க வைத்து, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஊற்றினார். உடல் முழுதும் வெந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் காதர் பாஷா சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து விசாரித்த புழல் போலீசார், நிலவர் நிஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர் பாஷா, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ