உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இருளில் மூழ்கும் மருத்துவமனை ஜெனரேட்டர் வசதி அமையுமா?

இருளில் மூழ்கும் மருத்துவமனை ஜெனரேட்டர் வசதி அமையுமா?

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், மூன்றாண்டுகளுக்கு முன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.இங்கு சின்னம்மாபேட்டை, வீரராகவபுரம், மணவூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும் 150க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அதேபோல், விபத்தில் சிறு காயமடைந்தவர்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பெற்ற பெண்கள் என, 10க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், வெளிச்சமின்றியும் காற்று வசதி இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, விரைந்து ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை