உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடில் பக்தர்கள் கூட்டம் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா?

திருவாலங்காடில் பக்தர்கள் கூட்டம் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா?

திருவாலங்காடு, திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடப்பது வழக்கம். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் பங்கேற்பர். பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்து கார் வாயிலாக வந்து பூஜையில் பங்கேற்கின்றனர்.அவ்வாறு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை கோவில் எதிரே உள்ள சன்னிதி தெரு மற்றும் வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதிகளில் நிறுத்தி செல்கின்றனர்.இதனால், இருசக்கர வாகனம் மற்றும் டூரிஸ்ட் வேன்களில் வரும் பக்தர்கள் மற்றும் பாதசாரிகள், வியாபாரிகள் உட்பட பலரும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, கோவில் நிர்வாகம், ஊராட்சி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, பக்தர்கள் கார்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !