தெருநாய்கள் பிடிக்கப்படுமா?
திருத்தணி, திருத்தணி நகராட்சியில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. தெருவில் நடந்து செல்வோரை நாய்கள் துரத்தி கடிக்கின்றன. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என, நகர மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.