உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சிகளில் செயலிழந்த கைபம்புகள் மழைநீர் தொட்டியாக மாற்றப்படுமா?

ஊராட்சிகளில் செயலிழந்த கைபம்புகள் மழைநீர் தொட்டியாக மாற்றப்படுமா?

பொன்னேரி:சோழவரம், மீஞ்சூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள சுடுகாடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில், தண்ணீர் தேவைக்காக கைபம்புகள் அமைக்கப்பட்டன. இவை, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாமல் செயலிழந்தன.இந்த இரு ஒன்றியங்களிலும், 200க்கும் மேற்பட்ட கைபம்புகள் செயலிழந்து, காட்சி பொருளாக இருக்கின்றன. சுடுகாடு மற்றும் குடியிருப்பு பகுதிகளின் தண்ணீர் தேவைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், செயலிழந்த கை பம்புகளை, மழைநீர் சேகரிப்பு தொட்டிகளாக மாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:ஒவ்வொரு இடத்திலும் உள்ள கைபம்புகள், 70 - 90 அடி ஆழம் கொண்டவையாக உள்ளன. இவற்றில் உள்ள இரும்பு தளவாடங்களை அகற்றிவிட்டு, மழைநீர் தொட்டியாக மாற்ற வேண்டும். இது, நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கு பயனுள்ளதாக மாறும். மழைநீர் சேகரிப்பு தொட்டிகளையும் கண்துடைப்பிற்காக அமைக்காமல், சரியான திட்டமிடலுடன் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை