விடியங்காடில் அரசு பள்ளி கட்டடம் சீரமைக்கப்படுமா?
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், விடியங்காடு ஊராட்சிக்கு உட்பட்டவை வெங்கடாபுரம் மற்றும் தாமரைகுளம் கிராமங்கள். இந்த கிராமங்களில் அரசு தொடக்க பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. வெங்கடாபுரம் அரசு தொடக்க பள்ளியின் வகுப்பறை கட்டடம், ஓடுகள் வேய்ந்த பழமையான கூரை கட்டடமாக உள்ளது. ஓடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால், இதே போல், விடியங்காடு அடுத்த தாமரைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளியின் வகுப்பறை கட்டடமும் சேதம் அடைந்துள்ளது. அதே நேரத்தில், இந்த இரண்டு பள்ளிகளின் சமையல் அறை கட்டடங்கள் சமீபத்தில், கான்கிரீட் கட்டடமாக புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பள்ளிப்பட்டு வட்டம், நொச்சிலி ஊராட்சி, கொத்துார் மற்றும் டி.வி.கண்டிகையில் கூரை ஓடு வேய்ந்த வகுப்பறை கட்டடங்கள் கடந்த ஆண்டு, வெப்ப தடுப்புகளுடன் கூடிய இரும்பு கூரையால் சீரமைக்கப்பட்டது. இந்த பள்ளி கட்டடங்களை போல், வெங்கடாபுரம் மற்றும் தாமரைகுளம் அரசு தொடக்க பள்ளி கட்டடங்களையும் மேம்படுத்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.