உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்டுறவு சர்க்கரை ஆலை சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

கூட்டுறவு சர்க்கரை ஆலை சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

திருவாலங்காடு,:திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 115 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலைக்கு, 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. தற்போது, சுற்றுச்சுவர் பெரும்பாலான இடங்களில் இடிந்தும், விரிசல் விட்டும் காணப்படுகிறது.இதனால், அருகில் உள்ள கிராமவாசிகள், தங்கள் கால்நடைகளை சர்க்கரை ஆலை பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். மேலும், இரவில் 'குடி'மகன்கள் மற்றும் சமூக விரோதிகள் ஆலையை தவறான பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, கூட்டுறவு சர்க்கரை ஆலை இடத்தை பாதுகாக்க, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி