உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி அரசு மகளிர் பள்ளியில் கழிப்பறை வசதி அதிகரிக்கப்படுமா?

பொன்னேரி அரசு மகளிர் பள்ளியில் கழிப்பறை வசதி அதிகரிக்கப்படுமா?

பொன்னேரி:பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கழிப்பறை வசதிகள் குறைவாக இருப்பதால், மாணவியர் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதிகள் இல்லாததால், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என, 21 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அவையும் உரிய பராமிப்பு இன்றி கிடக்கின்றன.ஒரு கழிப்பறையை, சராசரியாக 70 - 80 மாணவியர் பயன்படுத்தும் நிலை உள்ளது. குறைந்த இடைவெளி நேரத்தில் அனைத்து மாணவியரும் இயற்கை உபாதகளை கழிக்க கழிப்பறை செல்லும் போது பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இடைவெளி நேரம் முடியும் நிலையில், பெரும்பாலான மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்காமல் வகுப்பறை திரும்புகின்றனர். இதனால், மாணவியர்களின் சுகாதாரம் பாதிக்கிறது. பள்ளியில் உள்ள 'மாணவர் மனசு ' புகார் பெட்டியிலும், தங்களது இன்னல்களை முறையிட்டு உள்ளனர்.எனவே, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை