உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்டுமான பணி தளத்தில் ஒயர் திருடியவர் கைது

கட்டுமான பணி தளத்தில் ஒயர் திருடியவர் கைது

ஊத்துக்கோட்டை:கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த நபர், ஒயர் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டார். பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு, விழுப்புரம் மாவட்டம், பெரியகிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், 25, என்பவர் பணியாற்றி வந்தார். இவர், பணியின் போது, அங்கு பயன்படுத்தப்படும் ஒயரை தனியாக ஒரு இடத்தில் சேகரித்து வந்தார். நேற்று முன்தினம், அந்த ஒயர்களை எடுத்துச் சென்றபோது, பணியில் இருந்த பொறியாளர் வினுபாலன், 30, என்பவர், கையும், களவுமாக பிடித்தார். பின், அவரை பெரியபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், அரிகுமாரிடம் இருந்து, 100 மீட்டர் ஒயரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ