மேலும் செய்திகள்
போலி நகை அடமானம் வைத்த பெண் கைது
02-Oct-2024
திருவாலங்காடு, ஆந்திர மாநிலம் மல்லாரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடைய்யா மனைவி லதா, 48.இவர் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரத்தில் ரேகா என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் கடந்த மாதம் 22ம் தேதி 29 கிராம் தங்க நகையை அடகு வைத்து 1.25 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார்.கடந்த 5ம் தேதி அதே கடையில் 20 கிராம் நகையை அடகு வைத்து 90,000 ரூபாய் பெற்றுள்ளார். சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் அடகு வைத்த நகைகள் சோதனை செய்தபோது அவை போலி நகைகள் என்று தெரியவந்தது.ரேகா அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் போலி நகையை அடகு வைத்து ஏமாற்றிய லதாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
02-Oct-2024