உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஒடிஷாவில் இருந்து 12 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது

ஒடிஷாவில் இருந்து 12 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது

மீஞ்சூர்:ஒடிஷாவில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண்ணை, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, செங்குன்றம் மதுவிலக்கு போலீசார், வடமாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார், மீஞ்சூர், சோழவரம், மணலி, எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சோழவரம் டோல்கேட் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த பெண் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த நிலையில், அவர் வைத்திருந்த உடைமையை சோதனை செய்தனர். அதில், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த திவ்யா, 28, என்பதும், ஒடிஷா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை