உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது

மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது

திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழாந்துார் பகுதியை சேர்ந்த சுந்தரம்மாள், 60, என்பவர் மூச்சு திணறல் காரணமாக பிப்ரவரி மாதம் திருத்தணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார். சுந்தரம்மாள், துாங்கி கொண்டிருந்த போது, பெண் ஒருவர், அவர் அணிந்து இருந்த ஒரு சவரன் தாலி செயினை திருடிச் சென்றார். இதுகுறித்த புகார்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, மருத்துவமனையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சுந்தரம்மாளிடம் நகை திருடிய திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் மோட்டூர் பகுதி சேர்ந்த அம்பிகா,27 என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடிய நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை