உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டையில் தண்டவாளத்தை கடக்கும் போது, சரக்கு ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்தார். சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் உள்ள செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே, நேற்று காலை 10:30 மணியளவில் பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, திருப்பூரில் இருந்து சென்னை எண்ணுார் துறைமுகம் நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். தகவலறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த புஷ்பா என தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ