உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டெங்கு காய்ச்சலால் பெண் பலி? பெரியபாளையத்தில் பரபரப்பு

டெங்கு காய்ச்சலால் பெண் பலி? பெரியபாளையத்தில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே டெங்கு காய்ச்சல் பாதித்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜன். இவரது மனைவி ஜமுனா, 44. கடந்த மாதம் 26ம் தேதி உடல்நிலை பாதித்த ஜமுனா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவரை பரிசோதித்ததில் 'டெங்கு' காய்ச்சல் இருப்பது தெரிந்தது. பின், சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 28ம் தேதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். தலையில் காயமடைந்தவர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, பெரியபாளையம் அம்பேத்கர் நகரில் கல்பனா, 38, என்ற பெண், டெங்கு காய்ச்சல் பாதித்து, சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் சீதாலட்சுமி கூறுகையில், ''டெங்கு காய்ச்சலால் ஜமுனா இறந்ததாக கூறுவது தவறு. ஆனாலும், அப்பகுதியில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ