மது விற்ற பெண் கைது 30 பாட்டில்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த அரியதுறை பகுதியில், வீட்டில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கவரைப்பேட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு வீட்டில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 30 மது பாட்டில்களைபறிமுதல் செய்தனர். பதுக்கி விற்பனை செய்த ஜெயந்தி, 45, என்பவரை கைது செய்தனர். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்துவருகின்றனர்.