உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி நிகழ்ச்சிக்கு அமைச்சர் லேட் 5 மணி நேரம் காத்திருந்த பெண்கள், மாணவியர்

அரசு பள்ளி நிகழ்ச்சிக்கு அமைச்சர் லேட் 5 மணி நேரம் காத்திருந்த பெண்கள், மாணவியர்

கீழச்சேரி:கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டி துவக்க விழாவிற்கு அமைச்சர் நாசர் 5 மணி நேரம் காலதாமதமாக வந்ததால் மாணவியர் மற்றும் பெண்கள் காத்திருந்து சிரமப்பட்டனர். கடம்பத்துார் ஒன்றியம் கீழச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ளது சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. 800 மாணவியர் படிக்கும் இந்த பள்ளியில் நேற்று பள்ளி தலைமையாசிரியர் மேரி இசல்டா தலைமையில் விளையாட்டு விழா காலை 9:15 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். காலை 7:00 மணி முதல் மாணவியர் வருகையால் பள்ளி வளாகம் களை கட்டியது. 30 பெண்கள் அமைச்சரை, கும்பத்துடன் வரவேற்க காலை 7:00 மணிக்கே பள்ளி வளாகத்திற்கு வந்தனர். ஆனால் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., 3 மணி நேரம் காலதாமதமாக மதியம் 12:30 மணிக்கு வந்து விளையாட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். குடிக்க தண்ணீர், உணவு இல்லாமல் பெண்கள் அவதிப்பட்டதாக தெரிவித்தனர். பள்ளி மாணவியரும் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தனர். பள்ளி மாணவியர், பெண்கள் காலை 7:00 மணிக்கே வரவழைக்கப்பட்டு, 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதியம் 12:30 மணிக்கு நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் நாசர் மேடையில் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியபோது, அரசு நிகழ்ச்சிக்கு சென்றதால் காலதாமதம் ஏற்பட்டது. பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவியரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை