உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடிநீர் விநியோகம் கேட்டு பெண்கள் சாலை மறியல்

குடிநீர் விநியோகம் கேட்டு பெண்கள் சாலை மறியல்

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பி.என்.கண்டிகையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தெருக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் குடிநீருக்காக பெண்கள் சிரமப்பட்டனர்.இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திருத்தணி- பி.சி.என். கண்டிகை நெடுஞ்சாலையில் நேற்று மறியல் ஈடுபட்டனர்.திருத்தணி போலீசார் சமரசம் செய்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின் பெண்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ