உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விஷம் குடித்து ஊழியர் பலி

விஷம் குடித்து ஊழியர் பலி

புல்லரம்பாக்கம்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி, 45. மீஞ்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி, 40. ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சத்தியமூர்த்தி, நேற்று முன்தினம் மாலை விஷம் குடித்துள்ளார். இதையறிந்த மகேஸ்வரி, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ