உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிற்சாலையில் விபத்து தொழிலாளி உயிரிழப்பு

தொழிற்சாலையில் விபத்து தொழிலாளி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில், சோலார் பேனல் பொருத்தும் பணியின் போது, தவறி விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 22. கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, காரம்பேடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் ரப்பர் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில், சோலார் பேனல் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை 30 அடி உயரத்தில், சோலார் பேனல் பொருத்தும் போது தவறி விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன், அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி