உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

திருவள்ளூர்:திருவாலங்காடு ஒன்றியம் காரணி நிஜாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 33, இவர் அதே பகுதியில் உள்ள விஜயாஸ் மெட்டல்ஸ் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பணிபுரிந்தபோது மணிகண்டன் மீது அங்குள்ள ரோலிங் மோட்டர் விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ