உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்மோட்டார் சரி செய்தபோது தொழிலாளி உயிரிழப்பு

மின்மோட்டார் சரி செய்தபோது தொழிலாளி உயிரிழப்பு

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 62. கூலி தொழிலாளி.இவர் நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் போகிரெட்டி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.கிணற்றில் இருந்த மின்மோட்டாரை வெளியே எடுப்பதற்கு கிணற்று படிகட்டில் கயிறு கட்டியிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக படி கல் சரிந்து கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த சுப்பிரமணியின் மீது விழுந்தது. வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்தவரை மீட்டவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு நேற்று மாலை உயிரிழந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை