உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த புழுதிவாக்கத்தில், வடசென்னை அனல் மின்நிலையத்தின், மூன்றாவது நிலைக்கான கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.இங்கு, சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்த, நாவல்சிங், 24, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் கட்டுமான பிரிவில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், அங்குள்ள 'கூலிங் டவர் ' மீது நின்று பணிபுரிந்தபோது, கால்இடறி, கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.உடனடியாக அவர், சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, வழியில் இறந்தார்.தகவல் அறிந்த மீஞ்சூர், போலீசார் நாவல்சிங்கின் சடலத்தை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை