உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாலங்காடு:திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு திருத்தணி, பள்ளிப்பட்டு அரக்கோணம் உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து, கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.நடப்பாண்டிற்கான கரும்பு அரவை சில நாட்களில் துவங்க உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணியளவில், 50க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாக அலுவலகத்தின் தரைததளத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறியதாவது:நிலுவையில் உள்ள 4.30 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆலை திறப்பு குறித்து உறுதியான தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தேதிகளில் ஆலை திறக்கப்படுவதால், கரும்பை எப்போது வெட்டுவது என, தெரியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால், ஆலையின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது.வரும் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அரவையை துவங்குவோம் என, நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆலை மேலாண்மை இயக்குனர் பேச்சு நடத்தி தீர்வு காண்பதாக அளித்த உத்தரவாதத்தை அடுத்து, இரவு 7:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். கரும்பு விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தால் ஆலை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி