உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழா

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா,நடந்தது. உலகம் முழுதும், ஆக., முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழாவை, கல்லுாரி முதல்வர் மருத்துவர் ரேவதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதன் அவசியம் குறித்து, வினாடி - வினா, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில், தாய்ப்பால் மட்டுமே கொடுத்து சிறந்த முறையில் வளர்த்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மருத்துவர் சத்யா பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !