உள்ளூர் செய்திகள்

 உலக மண் தின விழா

திருவள்ளூர்: திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், உலக மண் தின விழா நடந்தது. திருவள்ளூர் அடுத்த, திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், உலக மண் தின விழா திட்ட ஒருங்கிணைப்பாளர் பானுமதி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர், மண்வளத்தை பாதுகாக்கும் தொழில்நுட்பம் குறித்து விளக்கவுரையாற்ற, இந்த ஆண்டின் உலக மண் தின கருப்பொருளான வளமான மண் வளம் உள்ள நகரம் என்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில், மண் மாசுபடுதலை தடுக்கும் முறைகள், மண்வள மேலாண்மை மற்றும் பாதுகாக்கும் முறைகள் பற்றி பேராசிரியர்கள் விளக்கினர். நிகழ்ச்சியில், 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை