திருத்தணி தளபதி பள்ளியில் யோகா போட்டிகள் துவக்கம்
திருத்தணி,திருத்தணி தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளியில், வேலுார் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில், தெற்கு மண்டல அளவிலான யோகாசன போட்டிகள் நேற்று துவங்கின. யோகாசன மாஸ்டர் ஸ்ரீதர் வரவேற்றார்.இதில், தளபதி பள்ளியின் தாளாளர் எஸ்.பாலாஜி பங்கேற்று, யோகாசன போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டியில், திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து, 40 பள்ளிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.இதில், யோகா பயிற்சியை சிறப்பாக செய்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன. வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. பள்ளி முதல்வர் விநாயகம் நன்றி கூறினார்.