உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனுமதியின்றி பட்டாசு விற்ற வாலிபர் கைது

அனுமதியின்றி பட்டாசு விற்ற வாலிபர் கைது

பேரம்பாக்கம்:பேரம்பாக்கத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மப்பேடு போலீசார் பேரம்பாக்கத்தில் தனியார் திருமண மண்டபம் எதிரே பிரபு, 40, என்பவரது கடையில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது அவரது கடையில் அனுமதியின்றி விற்பனைக்கு வைத்திருந்த 4,000 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் பிரபுவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி