உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடு அருகே வாலிபர் கொடூரமாக வெட்டிக் கொலை

திருவாலங்காடு அருகே வாலிபர் கொடூரமாக வெட்டிக் கொலை

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி, போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் லோகேஷ், 19; பி.பார்ம் மாணவர். பூண்டியில் உள்ள தந்தையின் மருந்து கடையில், அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.திருவாலங்காடு அடுத்த சின்னம்மாபேட்டையில் உள்ள பாட்டி வீட்டில், தாயுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற லோகேஷ், மீண்டும் வீடு திரும்பவில்லை.இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடாவில் இருந்து கூடல்வாடி செல்லும் சாலையின் பாலம் அருகே, லோகேஷ் கொடூரமாக வெட்டி, படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.தகவலறிந்து, நேற்று காலை வந்த திருவாலங்காடு போலீசார், சடலத்தை மீட்டனர். திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் உள்ளிட்ட போலீசார் வந்து சடலத்தையும், அப்பகுதியில் தடயங்களையும் ஆய்வு செய்தனர்.லோகேஷின் சடலத்தில் மார்பு, கை, கழுத்து உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. இதையடுத்து, திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சடலத்தை, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறியதாவது:பத்து நாட்களுக்கு முன், தந்தையின் மருந்து கடையில் இருந்த லோகேஷை, மர்ம நபர்கள் சிலர் கத்தியுடன் துரத்தியுள்ளனர். அதுகுறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணையை துவக்கியுள்ளோம். இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை