உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பத்தைச் சேர்ந்தவர் சரவணன் 24. இவர், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். சபரிமலை கோவிலுக்கு சென்றிருந்த சரவணன், நேற்று முன்தினம் வீடு திரும்பினார். பின், திருநின்றவூரில் உள்ள தன் தாயை பார்ப்பதற்காக, 'யமஹா ஆர்15' இருசக்கர வாகனத்தில், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூரை நோக்கி சென்றார்.கனகம்மாசத்திரம் அடுத்த புதூர் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த சரவணனை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்னர்.அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை