உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி

மீஞ்சூர்:மீஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ், 27; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன் தினம் இரவு மீஞ்சூர் பகுதியில் பணி முடித்துவிட்டு, 'யமஹா' பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மீஞ்சூர் - பொன்னேரி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த வாகனம் ஒன்று, ஆகாஷின் பைக் மீது மோதியது. இதில், ஆகாஷ் அதே வாகனத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார், உடலை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை