உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பசு மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

பசு மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே பசு மாட்டின் மீது பைக் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் பிரபு நவீன், 39. நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு 'புல்லட்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருவள்ளூர் ---- அரக்கோணம் நான்கு வழிச்சாலையில், புண்டரீகபுரம் அரசு துவக்கப்பள்ளி அருகே சென்றபோது, குறுக்கே வந்த பசு மாடு மீது பைக் மோதியது. இதில், பிரபு நவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சடலத்தை மீட்ட திருவாலங்காடு போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை