மேலும் செய்திகள்
மத்தியஸ்தம் பேச சென்ற வழக்கறிஞர் மீது 'தாக்கு'
24-Apr-2025
திருவாலங்காடு, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா உள்ளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிபாபு, 27. தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் சரவணன், 27 என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கனகம்மாசத்திரம் பஜாருக்கு சென்றார்.பின் இலுப்பூர் தடுப்பணை அருகே இருவரும் மது அருந்தியுள்ளனர். மது போதையில் இருவரும் தடுப்பனையில் குளித்தபோது அரிபாபு நீரில் மூழ்கியுள்ளார்.நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த சரவணன் கனகம்மாசத்திரம் போலீசார் மற்றும் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அரிபாபுவின் உடலை மீட்டு கனகம்மாசத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
24-Apr-2025