மேலும் செய்திகள்
பைக் மீது லாரி மோதி தொழிற்சாலை உரிமையாளர் பலி
03-Oct-2025
வேப்பம்பட்டு: வேப்பம்பட்டு பகுதியில் இரவு நெடுஞ்சாலை மையத் தடுப்பு பகுதியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிவாசு, 33. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் வேப்பம்பட்டு பகுதியில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது வேப்பம்பட்டு பஜார் பகுதியில் இருசக்கர வாகனம் தடுமாறி நெடுஞ்சாலை மையத்தடுப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
03-Oct-2025