சாலை விபத்தில் வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி, மஹாராஸ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜவர்தன் சயாஜி ராவ், 28. சென்னை, தேனாம்பேட்டையில் வசித்தபடி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.வார விடுமுறை நாட்களில் அவர், ராயல் எண்பீல்ட் புல்லட் இருசக்கர வாகனத்தில்,. லாங் ரைட் செல்வதை வழக்கமாக கொண்டவர். நேற்று முன்தினம் லாங் ரைட் சென்றவர், இரவு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானார்.படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.